| |
|
|
| |
|
|
| |
எனதருமை நாட்டு மக்களே, |
|
| |
|
|
| |
மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி, அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி எழுப்பிய பிறகு வரும் இரண்டாவது தீபாவளியாகும். பகவான் ஸ்ரீ ராமர் நீதியை நிலைநாட்டக் கற்றுக்கொடுக்கிறார், மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இதற்கு ஒரு தலைசிறந்த உதாரணத்தைக் கண்டோம். ஆபரேஷன் சிந்தூரின் போது, பாரதம் நீதியை நிலைநாட்டியது மட்டுமல்லாமல், அநீதியைப் பழிதீர்த்தது. |
|
| |
|
|
| |
குறிப்பாக இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், நாடு முழுவதும் ஒளி தீபங்கள் மலரும். முதல்முறையாக தொலைதூரப் பகுதிகள் உள்பட நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் வேருடன் ஒழிக்கப்பட்ட மாவட்டங்களில் தீபங்கள் ஏற்றப்படும். சமீப காலங்களில், பலர் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிப் பாதை எனும் மைய நீரோட்டத்தில் இணைந்து, நமது நாட்டின் அரசியலமைப்பின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். இது நாட்டின் மகத்தான ஒரு சாதனையாகும். |
|
| |
|
|
| |
இந்த வரலாற்று சாதனைகளுக்கு மத்தியில், நாடு அண்மையில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. நவராத்திரியின் முதல் நாளில், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த ஜிஎஸ்டி சேமிப்பு விழாக்காலங்களில், மக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைச் சேமித்து வருகின்றனர். |
|
| |
|
|
| |
பல நெருக்கடிகளைக் காணும் உலகில், பாரதம் நிலைத்தன்மை, கூர்ந்தறியும் திறன் ஆகிய இரண்டின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் நாம் பயணிக்கிறோம். |
|
| |
|
|
| |
வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இந்தப் பயணத்தில், மக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும். |
|
| |
|
|
| |
"சுதேசி" எனப்படும் உள்ளூர் தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு, "இதுதான் சுதேசி!" என்று பெருமையுடன் கூறுவோம். "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற உணர்வை ஊக்குவிப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம். நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து யோகாவை ஏற்றுக்கொள்வோம். இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற பாதையில் விரைவாக முன்னேற்றும். |
|
| |
|
|
| |
ஒரு விளக்கைக் கொண்டு மற்றொரு விளக்கை ஏற்றும்போது, அதன் ஒளி குறையாது. மாறாக அது மேலும் அதிகரிக்கும் என்பதையும் தீபாவளி நமக்குக் கற்பிக்கிறது. அதே உணர்வோடு, இந்த தீபாவளியில் நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு, நேர்மறை உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். |
|
| |
|
|
| |
உங்கள்,
நரேந்திர மோடி |
|
| |
 |
|
| |
|
|
| |
 |
|
| |
|
|
| |
இந்தக் கடிதத்தை உங்களுக்குப் பிடித்த மொழியில் படியுங்கள். |
|
| |
|
|
| |
|
|
| |
|
|
| |
|
|
|
| |